The Search

The Search

எவரெசுட்டு சிகரம்

உலகின் மிகவுயர்ந்த சிகரம்; நேபாளத்திற்கும் சீனாவிற்கும் இடையில் அமைந்துள்ள இமயமலை மலைத்தொடர

எவரெசுட்டு சிகரம், நேபாளத்தில் சாகர்மா என்றும், சீனாவில் சோமோலுங்குமா என்றும் அழைக்கப்படுகிறது. இது உலகிலேயே யாவற்றினும் மிக உயர்ந்த கொடுமுடியாகும். இது கடல் மட்டத்திலிருந்து 8,848 உயரம் மீட்டர் ஆகும். இமயமலையின் மஹாலங்கூர் மலைத்தொடரில் எவரெஸ்ட் மலை அமைந்து உள்ளது.

மேலும், பூமியின் மையத்தில் இருந்து அளக்கப்பட்டால், 5 வது உயரமான மலை ஆகும். இது இமயமலையின் பிரிவில் அமைந்துள்ளது. சீனா மற்றும் நேபாளம் இடையேயான சர்வதேச எல்லையானது எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் உள்ளது. அதன் மேல்பகுதியில் அண்டை சிகரங்கள் இலோட்ஃசே மலை, 8,516 மீ ; நபுட்சே, 7,855 மீ, மற்றும் சாங்சே, 7,580 மீ ஆகும்.

Wikipedia · CC BY-SA