The Search

The Search

கேப் டவுன்

கேப் டவுன் தென்னாபிரிக்காவில் உள்ள இரண்டாவது பெரிய நகரம் ஆகும். இது மேற்குக் கேப் மாகாணத்தின் தலைநகரமும், தென்னாபிரிக்காவின் சட்டவாக்கத் தலைநகரமும் ஆகும். இங்கேயே தேசிய நாடாளுமன்றமும், வேறு பல அரச அலுவலகங்களும் அமைந்துள்ளன. கேப் டவுன், இதன் துறைமுகத்துக்காகப் பெயர் பெற்றது. இது தென்னாபிரிக்காவின் மிகப் பெயர் பெற்ற சுற்றுலா மையமும் ஆகும்.

Wikipedia · CC BY-SA