The Search
சியோல்
சியோல் தென்கொரிய நாட்டின் தலைநகராகும். உலகின் மக்கள் தொகை அதிகமுள்ள நகரங்களில் இதுவும் ஒன்றாகும்.10மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இங்கு வாழ்கின்றனர். சியோல் தென்கொரிய நாட்டின் வடமேற்குப்பகுதியில், தென்கொரிய-வடகொரிய எல்லைக்கருகே ஹான் நதியின் கரையில் அமைந்துள்ளது.சியோல் 2000வருடங்கள் மேலான நீண்ட வரலாற்றைக் கொண்டது. கி.மு. 18இல், கொரியாவின் மூன்று இராச்சியங்களில் ஒன்றான பகேஜ் இராச்சியத்தில் சியோல் உருவாக்கப்பட்டது.இது ஜோஸியோன் இராஜவம்சம் மற்றும் கொரியா பேரரசு காலப்பகுதியிலும் கொரியாவின் தலைநகராகத் திகழ்ந்தது.சியோல் பெருநகர் பகுதி,நான்கு யுனெஸ்கோ மரபுரிமைத் தளங்களை கொண்டுள்ளது.சியோல் மலைகளால் சூழப்பட்டுள்ளது.நவீன அடையாளச்சினங்களான N சியோல் கோபுரம்,லோட்டே வேர்லட்(Lotte World),உலகின் இராண்டாவது பெரிய உள்ளக கரும்பொருள் பூங்கா(world's second largest indoor theme park) மற்றும் நிலவொளி வானவில் செயற்கை நீரூற்று,உலகின் மிகப்பெரிய பாலம் செயற்கை நீரூற்று என்பன சியோலில் அமைந்துள்ளது.
Wikipedia · CC BY-SA