The Search

The Search

ஜோன் மெக்கார்த்தி

ஜோன் மெக்கார்த்தி அமெரிக்க கணினி விஞ்ஞானியும் உணரறிவியல் அறிஞரும் ஆவார். செயற்கை நுண்ணறிவிற்காக தாம் ஆற்றிய பங்களிப்பிற்காக 1971 ஆம் ஆண்டு, டியூரிங் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 1956 ஆம் ஆண்டு இடம்பெற்ற டார்த்மோத் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட தனது ஆய்வறிக்கையில் முதன் முதலாக செயற்கை நுண்ணறிவிற்கு பொருத்தமான ஆங்கிலப்பதமான Artificial Intelligence என்ற பதத்தை பயன்படுத்தி அறிமுகப்படுத்தினார். இவரே, லிஸ்ப் (Lisp) என்ற கணினி மொழியைக் கண்டுபிடித்தவராவார்.

Wikipedia · CC BY-SA