The Search
நாபூ
நாபூ (Nabu) பண்டைய மெசொப்பொத்தேமியாவின் சுமேரியக கடவுள் ஆவார். மர்துக் - சர்பனித்தம் கடவுளரின் மகனான நாபூ கடவுள் தாவரங்கள், எழுத்தறிவு, அறிவியல், சாத்திரங்கள் மற்றும் ஞானத்திற்கு அதிபதி ஆவார். இவரது சின்னம் களிமண் பலகை மற்றும் எழுத்தாணி ஆகும். நாபூ கடவுள் கிமு 8-ஆம் நூற்றாண்டில் பண்டைய போர்சிப்பா நகரத்தில் பெரும் புகழுடன் வழிபடப்பட்டார்.
Wikipedia · CC BY-SA