The Search
ரெய்க்யவிக்
ரெய்க்யவிக், ஐஸ்லாந்து நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். வட அகலாங்கு 64°08' இல் அமைந்துள்ள இந்நகரமே உலகத்தின் வட துருவத்திற்கு அண்மையிலுள்ள தலைநகரமாகும். இது ஐஸ்லாந்தின் தென்மேற்குப் பகுதியில் பக்சஃப்லோய் விரிகுடாவின் தென் கரையில் அமைந்துள்ளது. ஐஸ்லாந்தின் பொருளாதார அரசியல் மையமாக உள்ள இந்நகரின் மக்கட்தொகை ஏறத்தாழ 120,000 ஆகும்.
Wikipedia · CC BY-SA