The Search

The Search

வெனிசு

வெனிஸ் இத்தாலி நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஒரு நகரம். இது ஒரு புகழ்பெற்ற சுற்றுலாப் பகுதியும் கூட. வெனிசு நகரே வெனிட்டோ பகுதியின் தலைநகரம். வெனிசு மொத்தம் 117 தீவுகளைக் கொண்டது. இவற்றின் ஊடே 150 வாய்க்கால்களும் ஓடுகின்றன. நிறைய சிறு பாலங்கள் இக்கால்வாய்களைக் கடக்க உதவுகின்றன. மேலும் கொண்டோலா எனப்படும் படகுகளும் போக்குவரத்திற்குப் பயன்படுகின்றன.

Wikipedia · CC BY-SA