The Search

The Search

ஹனோய்

ஹனோய் வியட்நாமின் தலைநகரமும் அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமுமாகும். 2009 மதிப்பீட்டின்படி இதன் நகர்ப்புறச் சனத்தொகை 2.6 மில்லியனும், புறநகர்ச் சனத்தொகை 6.5 மில்லியனும் ஆகும். 1010இலிருந்து 1802வரை, வியட்நாமின் முக்கிய அரசியல் மையமாகவும் திகழ்ந்தது. ஙுயென் வம்ச (1802–1945) ஆட்சிக்காலத்தில் ஆட்சித் தலைநகர் ஹூ நகருக்கு மாற்றப்பட்டது. எனினும் 1902இலிருந்து 1954 வரை பிரெஞ்சு இந்தோசீனாவின் தலைநகராக ஹனோய் செயற்பட்டது. 1954இலிருந்து 1976வரை வட வியட்நாமின் தலைநகராகவும், 1976இல் வியட்நாம் போரில் வடவியட்நாமின் வெற்றியைத் தொடர்ந்து ஒன்றிணைந்த வியட்நாமின் தலைநகராகவும் செயற்பட்டது.

Wikipedia · CC BY-SA