The Search
ஆம்ஸ்டர்டம்
ஆம்ஸ்டர்டம் , நெதர்லாந்து நாட்டின் தலைநகரமாகும். இந்நகரம், IJ bay, ஆம்ஸ்டல் என்ற இரு ஆறுகளின் கரையில் அமைந்துள்ளது. 12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு சிறிய மீனவ ஊராக ஆம்ஸ்டர்டம் உருவாக்கப்பட்டது. இன்று, இதுவே நெதர்லாந்தின் மிகப்பெரிய நகரமாகவும் பண்பாட்டு மற்றும் பொருளாதார மையமாகவும் விளங்குகிறது. ஆகஸ்ட் 1, 2006 நிலவரப்படி, ஆம்ஸ்டர்டமில் 741,329 மக்கள் வாழ்கிறார்கள். இதுவே, அண்டியுள்ள ஊர்களையும் உள்ளடக்கிய பெரு நகரான ஆம்ஸ்டர்டமையும் கணக்கில் கொண்டால் 15 இலட்சம் மக்கள் வாழ்கிறார்கள்.
Wikipedia · CC BY-SA