The Search

The Search

கெய்ரோ

எகிப்தின் தலைநகரம்

கெய்ரோ எகிப்து நாட்டின் தலைநகரம் மற்றும் நாட்டின் மிகப்பெரிய நகரம் ஆகும். அரபு உலகிலும் ஆப்பிரிக்காவிலும் இதுவே மிகப் பெரிய நகராகும். பெரும் கெய்ரோ எனப்படும் மாநகரப் பகுதி உலகில் 16வது பெரிய நகரப்பகுதியாக விளங்குகிறது. இந்நகரம் நைல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்கு 15 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இந்த நகரம் கிபி 969இல் நிறுவப்பட்டது. இங்குள்ள இசுலாமிய கட்டிடக் கலையைக் குறிக்கும் முகமாக ஆயிரம் மினராட்டுகளின் நகரம் என்று செல்லப் பெயரிடப்பட்டுள்ள இந்நகரம், இந்தப் பகுதி மக்களின் பண்பாட்டு மற்றும் அரசியல் வாழ்வில் மையமாக இருந்துள்ளது. தவிரவும் இது தொன்மைக்கால எகிப்தின் நகரங்களான மெம்பிசு, கீசா, பூசுடாட் ஆகியவற்றிற்கு அருகில் உள்ளது. மேலும் பெரிய ஸ்பிங்ஸ், கீசாவின் பிரமிடுகளுக்கும் வாயிலாக உள்ளது.

Wikipedia · CC BY-SA