The Search

The Search

பன்னாட்டு காபி நாள்

பன்னாட்டு காபி நாள் (International Coffee Day)(1 October) என்பது காபியை ஒரு பானமாக ஊக்குவிக்கவும் கொண்டாடவும் அனுசரிக்கப்படும் ஒரு நாளாகும். தற்பொழுது இந்நிகழ்வு உலகெங்கிலும் கொண்டாடப்படுகின்றது. அதிகாரப்பூர்வ முதல் காபி தினம் அக்டோபர் 1, 2015-இல், பன்னாட்டு காபி நிறுவனத்தினால் மிலனில் தொடங்கப்பட்டது. நியாயமான வர்த்தக காபியை ஊக்குவிக்கவும், காபி விவசாயிகளின் நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நாள் பயன்படுத்தப்படுகிறது இந்த நாளில், பல வணிகங்கள் இலவசமாக அல்லது தள்ளுபடி விலையில் காபியை வழங்குகின்றன. சில வணிகங்கள் சமூக வலைப்பின்னல் வழியாக தங்களை விசுவாசமான பின்தொடர்பவர்களுடன் கூப்பன்கள் மற்றும் சிறப்புச் சலுகைகளைப் பகிர்ந்து கொள்கின்றன. வாழ்த்து அட்டைகளை சில நிறுவனங்கள் தேசிய காபி தினத்தன்று அனுப்பி இத்தினத்தினை கொண்டாடுகின்றன.

Wikipedia · CC BY-SA

coffee — coffee

dictionary.aplusz.app