The Search

The Search

இடலை எண்ணெய்

இடலை எண்ணெய் என்பது ஐரோப்பிய இடலை என்ற மரத்தின் விதையில் இருந்து பிழிந்தெடுக்கப்படும் எண்ணெய் ஆகும். ஐரோப்பிய இடலை என்பது நடுநிலக் கடல் வடிப்பகுதியில் வளரும் Olea europaea என்னும் தாவரவியல் பெயர் கொண்ட மரமாகும். இம்மரத்தின் பழவிதைகளிலிருந்து இடலை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இது பிறமொழிகளில் ஒலிவ எண்ணெய், சைத்தூன் எண்ணெய் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றது. வேதிச்செயல்களின் மூலமாகவோ, அரவை இயந்திரங்களின் மூலமோ ஐரோப்பிய இடலை விதைகளிலிருந்து இடலை எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. இது சமைப்பதற்கும், அழகு சாதனப் பொருள்களிலும், மருந்துப் பொருள்களிலும், எண்ணெய் விளக்குகளில் எரிபொருளாகவும் பயன்படுகின்றது.

Wikipedia · CC BY-SA